verb

வினைச்சொல்(VERB) வினையைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும். வினை என்பது ஒருவர் செய்யும் செயலாகும். ஆகையால், செயல்களைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும்.
இது எப்பொழுதும் பெயர்ச்சொல்லைத் தழுவியே, அதனுடன் ஒன்றி வரும்.

 

வினைப் பிரிவுகள்(Verb classes)

1.முக்கிய வினை சொல் (Main verbs) 
2.உதவி வினை சொல் (Auxiliary verbs/helping verbs)
 
 

வினைச்சொல் வகைகள் (Types of Verbs) 

இது இரண்டு வகை படும் அவை
1.செயப்படுபொருள் குன்றாவினை(Transitive Verb)
2.செயப்படுபொருள் குன்றியவினை(Intransitive Verb)

 

1.செயப்படுபொருள் குன்றாவினை(Transitive Verb)

தன்னுடைய அர்த்தத்தை முற்றுப் பெறசெய்ய ஒரு செயப்படு பொருளை (OBJECT) எடுக்கும் வினைச் சொல்லானது செயப்படுபொருள் குன்றாவினை சொல்(TRANSITIVE VERB) எனப்படும் .
Transitive வினை, "எதை", "யாரை" என்ற கேள்விகளுக்குப் பதில் கூறும்.
  • (எ-டு) she ate fish(அவள் மீனைச் சாப்பிட்டாள்) "எதை" என்ற கேள்விக்குப் பதில் "மீனை" என்று கிடைப்பதால் இது transitive வினை எனப்படுகிறது.
  •  (எ-டு) she saw her friend(அவள் தன் தோழியைப் பார்த்தாள்)"யாரை" என்ற கேள்விக்குப் பதில் "தன் தோழியை" என்று கிடைப்பதால் இது transitive வினை எனப்படுகிறது. 

2.செயப்படுபொருள் குன்றியவினை(Intransitive Verb)

 தன்னுடைய  அர்த்தத்தை  முற்றுப் பெறசெய்ய  ஒரு  செயப்படு  பொருளை (OBJECT) எடுக்காமல் தன்னில்   தானே   அர்த்தத்தை   முற்றுப்  பெறசெய்யகிற  வினைச் சொல்லானது  செயப்படுபொருள்  குன்றியவினை சொல்(INTRANSITIVE VERB) எனப்படும் .
Intransitive வினையானது, "எதை" , "யாரை" என்ற கேள்விகளுக்குப் பதில் கூறுவதில்லை.

EX :  He ran (அவன் ஓடினான்) இது intransitive வினை எனப்படுகிறது